நூலக தகவல் விஞ்ஞான கருத்தரங்கு
செயற்திட்டச்சுருக்கங்களுக்கான அழைப்பு
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வித்தியானந்தன் நூலகத்தினால் நூலக தகவல் விஞ்ஞான கருத்தரங்கானது இவ்வாண்டு புரட்டாதி மாதம் 12ம் மற்றும் 13ம் ஆம் திகதிகளில் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது. தகவல் அறிவியல் சார்ந்த புதிய முயற்சிகள் தொடர்பிலான செயற்றிட்டங்களை (Projects) இக்கருத்தரங்கில் நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம். நிறைவடைந்த மற்றும் நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் நூலக தகவல் விஞ்ஞானம் சார்ந்த புத்தாக்க செயற்றிட்டச்சுருக்கங்களை தமிழ் அல்லது ஆங்கில மொழியில் சமர்ப்பிக்க முடியும்.
முக்கிய திகதிகள்
- ஆய்வாளரிடமிருந்து செயற்றிட்டச்சுருக்கங்களை பெறுதலுக்கான அழைப்பு – 27.05.2024
- செயற்றிட்டச்சுருக்கம் சமர்ப்பித்தலுக்கான இறுதித்திகதி –
27.06.202425.07.2024 - சமர்ப்பிக்கப்பட்ட செயற்றிட்டச்சுருக்கம் ஏற்றுக்கொள்ளப்பட்டமை பற்றிய அறிவிப்பு –
18.07.202409.08.2024 - திருத்தம் செய்யப்பட்ட செயற்றிட்டச்சுருக்கத்தினை சமர்ப்பித்தல் –
30.07.202416.08.2024 - கருத்தரங்கிற்கான பதிவுகளை மேற்கொள்ளல் –
15.08.202423.08.2024 - கருத்தரங்கு நடைபெறும் திகதிகள் – 12.09.2024 மற்றும் 13.09.2024
செயற்றிட்டச்சுருக்கம் சமர்ப்பிப்பதற்கான வழிகாட்டுதல்கள்
- செயற்றிட்ட சுருக்கங்கள் தமிழ் அல்லது ஆங்கில மொழியில் கணினியில் தட்டச்சு செய்யப்பட்டு, Ms-Word கோப்பாக சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
- செயற்றிட்ட தலைப்பு சுருக்கமாகவும், செயற்றிட்டத்தின் உள்ளடக்கத்தை பிரதிபலிப்பதாகவும் இருத்தல் வேண்டும்.
- இச்சுருக்கமானது செயற்றிட்டத்தின் அனைத்து பிரதான பகுதிகளையும் உள்ளடக்கி, 400-600 சொற்களைக் கொண்டதாக அமைந்திருத்தல் வேண்டும்.
- அறிமுகம் : செயற்றிட்டம் தொடர்பிலான பின்னணித் தகவல் அதன் முக்கியத்துவம், மற்றும் நோக்கங்கள் என்பன உள்ளடக்கப்படல் வேண்டும் (150 சொற்கள்)
- செயற்றிட்ட அமுலாக்க படிமுறைகள் (100 சொற்கள்)
- செயற்றிட்ட அடைவுகள், எதிர்பார்க்கைகள், மற்றும் விதப்புரைகள் (150 சொற்கள்)
- முடிவுரை (50 சொற்கள்)
- பரிந்துரைகள் (50 சொற்கள்)
- அட்டவணைகள், படங்கள் என்பன உள்ளக்கப்படக்கூடாது.
- திறவு சொற்கள் (3-5) குறிப்பிடப்படல் வேண்டும்.
- செயற்றிட்டச்சுருக்கத்தின் இறுதியில் ஐந்திற்கு மேற்படாத உசாத்துணை வளங்கள்; APA (7th ed.) உசாத்துணை வள விதிகளிற்கமைய குறிப்பிடப்பட்டிருத்தல் வேண்டும்.
பக்க வடிவமைப்பு
- பக்க அளவு A4.
- அனைத்து பக்க விளிம்புகளும் ஒரு அங்குல அளவுடையதாக இருத்தல் வேண்டும்.
- தமிழில் “கலகம் (Kalaham)” எழுத்துரு பயன்படுத்தப்படல் வேண்டும்.
- எழுத்துரு அளவு – 12pt
- வரி இடைவெளி – 1
- செயற்றிட்டச்சுருக்கத்தின் தலைப்பு “Center” பண்ணி “Bold” ஆக்கப்படல் வேண்டும்.
செயற்றிட்டச்சுருக்கங்களை சமர்ப்பிக்கும் முறை
- மேற் குறிப்பிடப்பட்ட முறையில் தயாரிக்கப்பட்ட செயற்றிட்டச் சுருக்கங்கள் 27.06.2024 இற்கு முன்னராக edi.etakam@univ.jfn.ac.lk எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படல் வேண்டும்.
- மேலதிக விபரங்களுக்கு ஆங்கிலத்தில் வழங்கப்பட்டுள்ள “Template” பார்வையிடவும்.
- மேலதிக தொடர்புகளுக்கு:
- கலாநிதி.திருமதி.க.சந்திரசேகர், பதில் நூலகர், யாழ்ப்பாண பல்கலக்கழகம் – 0775940064
- திருமதி.கோ.முருகதாஸ், பிரதி நூலகர், யாழ்ப்பாண பல்கலைக்கழகம் – 0775945327